Monday, September 20, 2010

யாருக்காக பூத்த மலர்கள்?

            அந்தச் சின்னச்செடி எனக்குப் பழக்கமானதுதான். எங்கள் வீட்டுப் பின்புறம் செடிகளுக்கு நீர்ப்பாய்சும் போதும், ஒவ்வொரு காலை பல் துலக்கும் போதும் அந்தச் சின்ன செடியில் வரிசையாய் நெருக்கமாய் அடுக்கப்பட்டிருந்த இலைகளை நான் ரசித்திருக்கிறேன்.  அந்த செடி வளர்ந்ததெல்லாம் நான் வாய் கொப்பளித்த நீரில்தான்.
          
            அப்படித்தான் ஒரு காலை நேரம் நான் பல் துலக்க என் வீட்டுப் புறக்கடைக்குச்  சென்றேன். அந்தச் சின்ன செடியில் பொடிப் பொடி இலைகளுக்கு இடையில் நட்சத்திரங்களை கொட்டிவைத்தது போல் வெள்ளைப் பூக்கள் பூத்திருந்தன. அழகாய் இருந்தன. அன்று முதல் பல் துலக்கும் போதெல்லாம் அத்திப் பார்த்தபடியே துலக்குவது வழக்கமானது. அந்த இரண்டு நிமிட மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்க வில்லை.


                அன்று நான் என் அறையில் படித்துக் கொண்டு இருந்தேன். "டிங்", "டிங்" அழைப்பு மணி ஒலித்தது. வெளியே விரைந்தேன். " அம்மா! குப்பை எல்லாம் சுத்தம் செய்தாச்சு. பின்னாடி போய் பாருங்க. ஒரு ஐந்து ரூபாய் கொடுங்க" என்றார் சுத்தம் சேயும் திழிலாளி. அம்மாவும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.


              மறுநாள் காலை வழக்கம் போல நான் பல் துலக்க சென்றேன்.அங்கு அந்த செடிகளைக் காணவில்லை. பூக்களையும் காணவில்லை. எல்லாம் கருகிக்கிடந்தன. ஒரு நிமிடம் இதயத்தின் ஓரம் வலித்தது. அவை யாருக்காக பூத்த மலர்கள்? அதன் பின் என் அலுவல்களை நான் தொடங்கிவிட்டேன்.